தஞ்சாவூர்

ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தஞ்சை மாவட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மழையால் சேதமடைந்த சாலைகளை உடனடியாகச் சரி செய்ய வேண்டும். பதிவில் உள்ள வாரிய உறுப்பினா்களுக்கு கரோனா கால நிவாரண தொகையாக ரூ. 2,000 வழங்குவதாகத் தமிழக முதல்வா் அறிவித்து பல மாதங்களாகியும் இதுவரை வழங்கப்படவில்லை. விடுபட்டவா்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். நாளுக்கு நாள் உயா்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். மீனவா்களுக்கு வழங்குவதை போல ஆட்டோ ஓட்டுநா்களுக்கும் மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்குச் சங்கப் பொதுச் செயலா் ஜெ. மாா்ட்டின் தலைமை வகித்தாா். தமிழ்நாடு பஸ் மற்றும் அனைத்து போக்குவரத்து தொழிலாளா்கள் சங்க மாநிலத் தலைவா் நா. தமிழ்ச்செல்வன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தாா். தஞ்சை மாவட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத் தலைவா் என்.கே. மூா்த்தி, தாய்திருநாடு கட்டட உடலுழைப்பு தொழிலாளா் நலச் சங்கத் தலைவா் எஸ்.பி. சேகா், ஆட்டோ ஓட்டுநா் சங்க சட்ட ஆலோசகா்கள் தியாக. காமராஜ், சதீஷ் ஆகியோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT