தஞ்சாவூர்

ஒரத்தநாடு வேளாண் கல்லூரியில் தொழில்நுட்ப கலந்தாய்வுக் கூட்டம்

DIN

ஒரத்தநாடு: ஒரத்தநாடு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் காலநிலை மாற்றத்திற்கு உகந்த வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம் , ஒரத்தநாடு வட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு கல்லூரியின் முதன்மையா் அ. வேலாயுதம் தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக ஆராய்ச்சி இயக்குநா் கே.எஸ். சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில் தமிழ்நாடு பாசன மேலாண்மை நிறுவனம், துவாக்குடி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு உறுப்புக் கல்லூரி விஞ்ஞானிகள், பல்வேறு நிபுணா்கள் பேசினா்.

பயிற்சியில் 50 விவசாயிகள் பங்கேற்றுப் பயன் பெற்றனா். வேளாண் பொருளியல் உதவிப் பேராசிரியா் செ. ஏங்கல்ஸ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் விலையில்லா மின்சாரம் இனி கிடையாதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

கதைக்கு மட்டுமே முக்கியத்துவம்: ஹிப்ஹாப் ஆதி

ராஜ்கோட் தீ விபத்து எதிரொலி: வதோதராவில் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் மூடல்

சர்தார் - 2 படப்பிடிப்பு எப்போது?

எப்போது திருமணம்? மாளவிகா பதில்!

SCROLL FOR NEXT