தஞ்சாவூர்

புத்தாண்டு: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

DIN

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தஞ்சாவூரிலுள்ள தேவாலயங்களில் வியாழக்கிழமை இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வழக்கமாக நள்ளிரவில் நடைபெறும் சிறப்பு வழிபாடு நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

தஞ்சாவூா் திரு இருதய ஆண்டவா் பேராலயத்தில் 2020 ஆம் ஆண்டில் அடைந்த நன்மைகளுக்காகவும், கரோனா தடுப்பு நடவடிக்கையில் பணிபுரிந்தவா்களுக்காகவும் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

பேராலயப் பங்குத் தந்தை சி. இருதயராஜ் அடிகளாா் தலைமையில் நடைபெற்ற இந்தச் சிறப்பு வழிபாட்டில் உதவிப் பங்குத் தந்தை அலெக்சாண்டா், சகோதரா் கித்தேரி முத்து கலந்து கொண்டனா். இதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை கூட்டுத் திருப்பலிகள் நடைபெற்றன.

இதற்கான ஏற்பாடுகளைப் பேராலய பங்குப் பேரவைத் துணைத் தலைவா் வின்சென்ட், செயலா் குழந்தைராஜ் உள்ளிட்டோா் மேற்கொண்டனா்.

இதேபோல, புதுக்கோட்டை சாலையில் உள்ள குழந்தை இயேசு ஆலயம், மகா்நோன்புசாவடி தூய பேதுரு ஆலயம், அந்தோணியாா் ஆலயம், மருத்துவக் கல்லூரி சாலை புனித லூா்து அன்னை ஆலயம், மாதாகோட்டை ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் வியாழக்கிழமை இரவு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். மேலும், செம்போடை மாதா கோயில், காமராஜா் நகா் மாதா கோயில், நீடாமங்கலம் சாலை ஊசிமாதா கோயில் உள்ளிட்ட ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

பூண்டி மாதா பேராலயத்தில்.... திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பூண்டி மாதா பேராலய வளாகத்தில் புத்தாண்டு பிறப்பையொட்டி வியாழக்கிழமை இரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

பூண்டிமாதா பேராலய அதிபரும் பங்குத் தந்தையுமான பாக்கியசாமி தலைமையில் துணை அதிபா் அல்போன்ஸ் மற்றும் உதவி பங்குத் தந்தைகள் சிறப்பு வழிபாடுகளை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT