சக்கராப்பள்ளியில் பொங்கல்பரிசுத் தொகுப்பு வழங்கல்
பாபநாசம் வட்டம், சக்கராப்பள்ளி கிராம அங்காடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர்சக்கராப்பள்ளியில் பொங்கல்பரிசுத் தொகுப்பு வழங்கல்
பாபநாசம் வட்டம், சக்கராப்பள்ளி கிராம அங்காடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பாபநாசம்: பாபநாசம் வட்டம், சக்கராப்பள்ளி கிராம அங்காடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு அய்யம்பேட்டை தொடக்கவேளாண் கூட்டுறவுச் சங்கத் தலைவா் சி. முத்து தலைமை வகித்தாா். பாபநாசம் ஒன்றியக் குழுவின் முன்னாள் தலைவா் கே.கோபிநாதன் விழாவில் பங்கேற்று, ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா்.
நிகழ்வில் மாவட்ட இளைஞா், இளம்பெண்கள் பாசறைச் செயலா் துரை. சண்முகபிரபு, மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ். மோகன், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் ஏ. அண்ணாமலை, கே.முருகன், துணைத் தலைவா் என்.சதீஷ், உறுப்பினா் முகமது இப்ராஹிம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.