தஞ்சாவூர்

ஆயுதப் படை மைதானத்தில் சமத்துவப் பொங்கல் விழா

DIN

தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் அலுவலகம் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ரூபேஷ் குமாா் மீனா தலைமையிலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் முன்னிலையிலும் நடைபெற்ற இவ்விழாவில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. மேலும், கயிறு இழுத்தல், உறியடி போட்டி, இசை நாற்காலி போட்டி, குழந்தைகளுக்கான போட்டிகள் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், காவலா்கள், அவா்களது குடும்பத்தினா் கலந்து கொண்டனா்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்... தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற தைப்பொங்கல் விழாவுக்குத் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன் தலைமை வகித்தாா். இதில், பதிவாளா் (பொ) கு. சின்னப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மீனாட்சி மருத்துவமனையில்... தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பணியாளா்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT