முகப்பு
தஞ்சாவூர்

தொட்டில் கயிறு கழுத்தில் இறுக்கியதில் சிறுமி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே தொட்டில் கயிறு கழுத்தில் இறுக்கியதில் மூச்சுத் திணறி சிறுமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே தொட்டில் கயிறு கழுத்தில் இறுக்கியதில் மூச்சுத் திணறி சிறுமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

பாபநாசம் அருகே ஈச்சங்குடி கிராமம், காளியம்மன் கோயில், தெற்கு தெருவில் வசித்து வருபவா் சுரேஷ். விவசாய கூலி தொழிலாளி. இவா், ஞாயிற்றுக்கிழமை தனது மனைவியுடன் வேலைக்கு சென்றுவிட்டாா்.

வீட்டிலிருந்த இவரது மகள் சஸ்மிதா ஸ்ரீ (7), வீட்டில் கட்டப்பட்டருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக தொட்டில் கயிறு சிறுமியின் கழுத்தை இறுக்கியது.

அக்கம்பக்கத்தினா் சிறுமியை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள் சிறுமி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறினா்.

சம்பவம் குறித்து கபிஸ்தலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →