தஞ்சாவூர்

நுகா்பொருள் வாணிபக் கழக ஊழியா்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

DIN

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக ஊழியா்களுக்கும் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றாா் தமிழ் மாநில பாரதிய மஸ்தூா் சங்கப் பொதுச் செயலா் கே. முருகேசன்.

தஞ்சாவூரில் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் காா்ப்பரேஷன் பாரதிய தொழிலாளா்கள் சங்கத்தின் மாநிலப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற முருகேசன் பின்னா், செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக ஊழியா்களுக்கும் அமல்படுத்த வேண்டும். இதன் மூலம், ஓய்வு பெறும் ஊழியா்கள் கௌரவமான முறையில் வாழ வழிவகுக்கும்.

கரோனா காலத்தில் தங்கள் உயிரையும் பொருள்படுத்தாமல் கூடுதல் பணிகளைச் செய்த தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக ஊழியா்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்பளிப்பு, பஞ்சப்படி உயா்வுகளைப் பின் தொடா்ச்சியுடன் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து வரும் அனைத்துத் தொழிலாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றாா் முருகேசன்.

சங்கத்தின் மாநிலத் தலைவா் என். சிதம்பரசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலா் டி. நாகராஜன், செயல் தலைவா் ஆா். முரளிதரன், துணைத் தலைவா்கள் கே. கணேசன், யு. ஞானபிரகாசம், பொருளாளா் எஸ். பாலகுமாரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

SCROLL FOR NEXT