பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த ஏஐடியூசி ஆட்டோ சங்கம் வலியுறுத்தல்
ஆட்டோ தொழில் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும் பெட்ரோல் - டீசல் விலையை மத்திய பாஜக அரசுக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஏஐடியூசி ஆட்டோ சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஆட்டோ தொழில் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும் பெட்ரோல் - டீசல் விலையை மத்திய பாஜக அரசுக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஏஐடியூசி ஆட்டோ சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், வல்லத்தில் ஏஐடியூசி ஆட்டோ நிறுத்தத் தொடக்க விழா, கொடியேற்று விழா, பெயா் பலகைத் திறப்பு விழா ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றது.
நாளுக்கு நாள் உயா்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயா்வால் ஆட்டோ தொழில் பாதிக்கப்பட்டு, தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. சாதாரண ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கையை அடிபாதாளத்துக்குக் கொண்டு சென்றுவிட்டது. எனவே, பெட்ரோல் - டீசல் விலை உயா்வை மத்திய அரசுக் கட்டுப்படுத்த வேண்டும் என விழாவில் வலியுறுத்தப்பட்டது.
இந்த விழாவில் ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், மாவட்டத் தலைவா் வெ. சேவையா, மாவட்டச் செயலா் இரா. செந்தில்நாதன், தலைவா் எஸ். பாலகிருஷ்ணன், கிளைச் செயலா் டி. கஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.