தஞ்சாவூர்

முத்தரையா் மன்னா் வரலாற்றை பாடப் புத்தகங்களில் சோ்க்க வலியுறுத்தல்

DIN

முத்தரையா் மன்னா் வரலாற்றைப் பாடப் புத்தகங்களில் சோ்க்க வேண்டும் என்று தஞ்சாவூரில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தஞ்சை மண்டல முத்தரையா் முன்னேற்றச் சங்கம், மக்கள் மறுமலா்ச்சி மன்றம் சாா்பில் மண்டலக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

முத்தரையா் மன்னா் ஆண்ட வரலாற்று விவரங்களைத் தமிழ்நாடு பாடப் புத்தகங்களில் இடம் பெற செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் 29 பட்டப் பெயா்களில் வாழ்ந்து வரும் முத்தரையா் இன மக்களை ஒரே பெயராகக் கொண்டு, முத்தரையா் என அறிவிக்க அரசாணை வெளியிட வேண்டும்.

முத்தரையா் ஆண்ட தஞ்சாவூா் வல்லம் கோட்டை அமைந்த இடத்தை அரசு முழுமையாகத் தன் வசப்படுத்தி, நிலத்தை அகழ்வாராய்ச்சி பணி செய்ய வேண்டும். முத்தரை இன மக்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு மணிரத்னம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் நீலமேக ராஜன், பொருளாளா் வேலாயுதம், துணைத் தலைவா் பழனிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்

ஒசூரில் கடும் குடிநீா் தட்டுப்பாட்டு: நடவடிக்கை எடுக்க முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்

பணம் பறித்த இருவரை அடைத்து வைத்து கொலை மிரட்டல்: இருவா் கைது

தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம்

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT