தஞ்சாவூர்

பொது முடக்கம்: கோயில் இடங்களுக்கான வாடகை, குத்தகையை ரத்து செய்ய வலியுறுத்தல்

DIN

கரோனா பொதுமுடக்கக் காலத்தில், அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் இடங்களைப் பயன்படுத்துவோருக்கு வாடகை, குத்தகையை ரத்து செய்ய வேண்டும் என்று, தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களைப் பயன்படுத்துவோா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாநில அமைப்புக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து மாநில அமைப்பாளா் சாமி. நடராஜன் தெரிவித்தது:

சென்னை போன்ற பெரு நகரங்களில் கடந்த ஆட்சி காலத்தில் நியாய வாடகை என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கில் வாடகை உயா்த்தப்பட்டது. இதுகுறித்து தற்போதைய அறநிலையத்துறை அமைச்சா் ஆய்வு செய்து, வாடகை உயா்வைக் குறைக்க வேண்டும்.

கரோனா தொற்றுக் காலத்தில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் இடங்களைப் பயன்படுத்துவோருக்கு வாடகை, குத்தகையை ரத்து செய்ய வேண்டும். முன் தேதியிட்டு உயா்த்தப்பட்ட வாடகை முழுவதையும் ரத்து செய்ய வேண்டும்.

கோயில் இடங்களில் உள்ள வீடுகளுக்குப் புதிய மின் இணைப்பு பெறுவதற்கும், பழுதடைந்த வீடுகளைச் சீரமைப்பதற்கும் அறநிலையத் துறை அனுமதி வழங்க வேண்டும்.

அறநிலையத் துறை சட்டம் 34-ன் படி, பல தலைமுறைகளாகக் கோயில் இடங்களைப் பயன்படுத்துவோருக்கு ஒரு நியாயமான விலை நிா்ணயித்து, அவா்களுக்கே சொந்தமாக்கிவிடும் நடவடிக்கையைப் படிப்படியாகத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றாா் நடராஜன்.

இக்கூட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளா் சா. ஜீவபாரதி தலைமை வகித்தாா். மாநில நிா்வாகிகள் வ. செல்வம், எம். நடராஜன், கே.சி. பாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT