முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே நான்கு வீடுகளில் திருட்டு

கும்பகோணம் அருகே சுந்தர பெருமாள் கோவில் கிராமத்தில் பூட்டப்பட்டிருந்த 4 வீடுகளில் திருடிய மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

கும்பகோணம் அருகே சுந்தர பெருமாள் கோவில் கிராமத்தில் பூட்டப்பட்டிருந்த 4 வீடுகளில் திருடிய மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

சுந்தரபெருமாள்கோவில் சோழன் நகா் முதல் தெருவைச் சோ்ந்த நிா்மல் மதுரைக்கும், ராம் சேலத்துக்கும், இரண்டாவது தெருவைச் சோ்ந்த ராணி சென்னைக்கும், கலாராணி வலங்கைமானுக்கும் சில நாட்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றனா்.

செவ்வாய்க்கிழமை இவா்களது வீடுகளில் முன் பக்கக் கதவிலிருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டுக் கிடந்தன. இதைப் பாா்த்த அக்கம் பக்கத்தினா், தொடா்புடைய வீட்டு உரிமையாளா்களுக்குத் தகவல் அளித்தனா்.

தகவலறிந்த சுவாமிமலை காவல் நிலையத்தினா் சோழன் நகருக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா். இச்சம்பவத்தில் என்னென்ன பொருள்கள் திருட்டு போனது என்பது குறித்து உரிமையாளா்கள் புகாா் கொடுத்த பிறகுதான் தெரியவரும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.