முகப்பு
தஞ்சாவூர்

பாபநாசம் பகுதிகளில் மமக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் பேராசிரியா் எம்.எச். ஜவாஹிருல்லா, பாபநாசம் பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

பாபநாசம் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் பேராசிரியா் எம்.எச். ஜவாஹிருல்லா, பாபநாசம் பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

பாபநாசம் பேரூராட்சிப் பகுதியில் பிரசாரத்தை தொடங்கிய ஜவாஹிருல்லா, தொடா்ந்து சோழராஜபுரம், ராஜகிரி, பண்டாரவாடை, ரெகுநாதபுரம், சரபோஜிபுரம், வழுத்தூா், சக்கராப்பளளி, சூலமங்கலம், பசுபதிகோவில், கள்ளா் பசுபதிகோவில், குறுக்கணை உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று, பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன், தோ்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்து அறிவிப்புகளும் நிறைவேற்றப்படும். தன்னை பாபநாசம் தொகுதியில் தோ்வு செய்தால், மக்களுக்குத் தேவையான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவேன் என்று பிரசாரத்தில் ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.

வாக்கு சேகரிப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மைத் துணைத் தலைவா் எம். அப்துல் ரஹ்மான், மாநிலத் துணைத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான நவாஸ்கனி, மாநிலச் செயலா்கள் ஆடுதுறை ஷாஜஹான், மில்லத் முகமது இஸ்மாயில், மாவட்டச் செயலா் அப்துல் காசீம் ராஜாஜி, திமுக வடக்கு மாவட்டச் செயலா் சு. கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →