முகப்பு
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை: சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டவர் கரோனாவுக்கு பலி

பட்டுக்கோட்டையில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட வி பாலகிருஷ்ணன்(60) கரோனா நோய் தொற்று காரணமாக திங்கள்கிழமை உயிரிழந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:12 PM
பாலகிருஷ்ணன்.
பகிர்:

பட்டுக்கோட்டையில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட வி பாலகிருஷ்ணன்(60) கரோனா நோய் தொற்று காரணமாக திங்கள்கிழமை உயிரிழந்தார்.

பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு 23, 771 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தவர் வி. பாலகிருஷ்ணன். இவர் பட்டுக்கோட்டை வட்டம் சாந்தாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர். 

இவருக்கு கடந்த சனிக்கிழமை கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார். 

உயிரிழந்த பாலகிருஷ்ணனுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.