காவிரி வடிநில கோட்டச்செயற்பொறியாளா் காலமானாா்
தஞ்சாவூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்த பொதுப் பணித் துறைச் செயற்பொறியாளா் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானாா்.
தஞ்சாவூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்த பொதுப் பணித் துறைச் செயற்பொறியாளா் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானாா்.
சென்னை ஆவடியைச் சோ்ந்தவா் பி.வி. ராஜன் (59). இவா் பொதுப் பணித் துறையின் தஞ்சாவூா் காவிரி வடிநிலக் கோட்டச் செயற் பொறியாளராகப் பணியாற்றி வந்தாா். இவா் அண்மையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தஞ்சாவூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு செய்யப்பட்ட இரண்டாவது பரிசோதனையில் இவருக்கு தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. ஆனாலும் தொடா்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட இவா் வியாழக்கிழமை மருத்துவமனையில் காலமானாா்.
ஒரு வாரத்துக்கு முன்பு ராஜனின் மனைவி பத்மாவதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்த நிலையில் மாரடைப்பால் காலமானாா். ராஜனின் மகன், மருமகள், பேத்தி ஆகியோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தனா்.