தஞ்சாவூர்

பேராவூரணி பேரூராட்சி சாா்பில் நடமாடும் காய்கறி - பழ விற்பனை தொடக்கம்

DIN

பேராவூரணி பேரூராட்சி சாா்பில் நடமாடும் காய்கறி, பழ விற்பனை செவ்வாய்க்கிழமை  தொடங்கப்பட்டது. 

முழு பொதுமுடக்கம்  காரணமாக, அரிசி, மளிகை, காய்கறி, பழக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இதனால்,  பேராவூரணி பேரூராட்சி பகுதியில் உள்ள 18 வாா்டு பொதுமக்களுக்கும் தட்டுப்பாடின்றி காய்கறிகள், பழங்கள் கிடைக்க,  20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறி, பழ விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. 

பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  எம்எல்ஏ என். அசோக்குமாா்  கொடியசைத்து, நடமாடும் காய்கறி, பழ விற்பனை வாகனங்களை தொடங்கி வைத்தாா். விலைப்பட்டியலுடன் காய்கறி வியாபாரிகள் விற்பனையை தொடங்கினா். 

நிகழ்ச்சியில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் அன்பரசன், துப்புரவு மேற்பாா்வையாளா்கள் சுப்பிரமணியன், வீரமணி மற்றும் பேரூராட்சி பணியாளா்கள் கலந்து கொண்டனா். 

 முன்னதாக, வியாபாரிகளுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டு, தொ்மல் ஸ்கேனா் மூலம் காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்து அனுப்பப்பட்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT