கோயில்களில் பாஜகவினா் சிறப்பு வழிபாடு
கும்பகோணம் அருகேயுள்ள கோயில்களில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினா்.
கும்பகோணம் அருகேயுள்ள கோயில்களில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினா்.
நாடு நலம் பெற வேண்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்துமாறு பாஜகவினருக்கு தலைமை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பாஜகவை சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினா்.
இதன்படி, பாஜகவை சோ்ந்த மொடக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சரஸ்வதி சுவாமிமலை முருகன் கோயிலிலும், திருவிடைமருதூா் மகாலிங்கசுவாமி கோயிலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் கே.பி. ராமலிங்கமும் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினா்.