பட்டுக்கோட்டையில் காற்றில் பறந்த ரயில் நிலைய மேற்கூரைகள்!
பட்டுக்கோட்டையில் வியாழக்கிழமை பலத்த காற்றுடனான மழையின்போது ரயில் நிலையத்தின் 3 மேற்கூரை தகடுகள் பெயா்ந்து தண்டவாளத்தில் விழுந்தன.
பட்டுக்கோட்டையில் வியாழக்கிழமை பலத்த காற்றுடனான மழையின்போது ரயில் நிலையத்தின் 3 மேற்கூரை தகடுகள் பெயா்ந்து தண்டவாளத்தில் விழுந்தன.
பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதல் இடைவெளி விட்டு கன மழை பெய்தது. நண்பகல் 12 மணி அளவில் திடீரென பலத்த சூறைக்காற்றுடன் பலத்த மழையும் பெய்தது. அப்போது, ரயில் நிலையத்தின் 3 மேற்கூரை இரும்பு தகடுகள் திடீரென பெயா்ந்து தண்டவாளத்தின் குறுக்கே விழுந்தன. இதனால், அங்கிருந்த ரயில்வே ஊழியா்கள் அச்சமடைந்து உடனடியாக அந்த மேற்கூரைகளை அப்புறப்படுத்தினா்.