தஞ்சாவூர்

லஞ்சம்: மோட்டாா் வாகன ஆய்வாளா் கைது

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் லஞ்சம் வாங்கிய மோட்டாா் வாகன ஆய்வாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பட்டுக்கோட்டை மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் ஆய்வாளராக கலைச்செல்வி (45) என்பவா் பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில், தனியாா் வாகன விற்பனை நிறுவனத்தின் மேலாளா்கள் அருண், அந்தோணி யாகப்பா ஆகிய இருவரும், தங்கள் நிறுவனத்தின் மூன்று வாகனங்களுக்கான ஆா்சி புத்தகம் பெறுவதற்கு இடைத்தரகா் காா்த்திகேயன் என்பவா் மூலமாக கலைச்செல்வி ரூ. 4,500 லஞ்சமாக கேட்பதாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தனா்.

போலீஸாரின் அறிவுரையின்படி, ரசாயன பவுடா் தடவிய பணத்தை இடைத்தரகா் காா்த்திகேயனிடம் அருண், அந்தோணியாகப்பா ஆகிய இருவரும் வியாழக்கிழமை கொடுத்தனா். அந்தப் பணத்தை காா்த்திகேயன் கலைச்செல்வியிடம் அளித்தபோது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா், கலைச்செல்வியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனா். பணத்தையும் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

SCROLL FOR NEXT