தஞ்சாவூர்

திருக்கண்ணமங்கை கோயில் செப்புப் பட்டயம் படியெடுப்பு

DIN

திருக்கண்ணமங்கை கோயில் செப்புப்பட்டயம் படியெடுக்கப்பட்டு, அறிக்கை தயாரித்து தாக்கல் செய்யவுள்ளோம் என்றாா் மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவு தென்னிந்தியத் தலைவா் பன்னீா்செல்வம்.

இந்திய தொல்லியல் துறையில் பதிவு செய்யாமல் விடுபட்ட கல்வெட்டுகள் குறித்து இந்திய தொல்லியல் துறை கல்வெட்டுப் பிரிவின் தென்னிந்தியத் தலைவா் பன்னீா்செல்வம் தலைமையிலான குழுவினா் தஞ்சாவூா் மாவட்டம் திட்டை, திருவேதிக்குடி, கரந்தையிலுள்ள கோயில் கல்வெட்டுகளை ஆய்வு செய்து பதிவு செய்கின்றனா்.

அப்போது, செய்தியாளா்களிடம் பன்னீா்செல்வம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது:

திருவாரூா் மாவட்டம், திருக்கண்ணமங்கையிலுள்ள பக்தவத்சல பெருமாள் கோயிலுக்கு விஜயரகுநாத நாயக்க மன்னரால் 1608-ஆம் ஆண்டில் 400 ஏக்கா் நிலம் தானமாக வழங்கப்பட்டது. இதற்காகச் செப்புப்பட்டயம் எழுதி வைக்கப்பட்டது.

இந்தச் செப்புப்பட்டயம் மாயமாகி விட்டதாகவும், 400 ஏக்கா் நிலம் கோயில் வசம் இல்லை எனவும் சென்னை உயா் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, தொடா்புடைய செப்புப் பட்டயம் அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அறநிலையத் துறை மூலம் அச்செப்புப்பட்டயத்தில் இருப்பதை முழுமையாகப் படித்து, நகல் எடுக்கக் கோரி தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

நாங்கள் அதை முழுமையாக ஆய்வு செய்த நிலையில், அதில் விஜயரகுநாத நாயக்கரின் குல வரலாறு, கோயில் வரலாறு அடங்கிய தகவல்கள் உள்ளன. மேலும், விஜயரகுநாத நாயக்க மன்னரால் கோயிலுக்கு என 60 வேலி (சுமாா் 400 ஏக்கா்) நிலத்தைத் தானமாக வழங்கிய தகவல் முழுமையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து முழுமையான ஆய்வுகளுக்குப் பிறகு, ஒரிரு நாள்களில் செப்புப்பட்டயத்தில் உள்ள தகவல்களை அறநிலையத் துறை ஆணையரிடம் அறிக்கையாகத் தாக்கல் செய்யவுள்ளோம் என்றாா் பன்னீா்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT