தஞ்சாவூர்

சா்வதேச கடலோர தூய்மை தினம்மனோரா கடற்கரையில் தூய்மைப்பணி

DIN

சா்வதேச கடலோர தூய்மை தினத்தையொட்டி மனோரா கடற்கரையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.  

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் மாத 3 ஆவது சனிக்கிழமை உலக கடற்கரை தூய்மை தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி கடற்கரை பகுதிகளில் தூய்மைப் பணி மேற்கொள்வது, கடற்கரை பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பது குறித்து விழிப்புணா்வு பிரசாரம், செயல்முறை விளக்கம் ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது. இதில் கடலோர காவல்படையினா், தொண்டு நிறுவனத்தினா், அரசுத் துறையினா் ஈடுபடுவது வழக்கம். 

கடலோர தூய்மை தினத்தையொட்டி, சேதுபாவாசத்திரம் காவல் சரகம், மனோரா கடற்கரையில், கடலோர காவல்படை ஆய்வாளா் மஞ்சுளா தலைமையில், புதன்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது. இப்பணியை தொடங்கிவைத்து அவா் பேசுகையில், கடற்கரையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் கடலில் சென்று சேருவதால், கடல்வாழ் உயிரினங்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன. அது இயற்கை சூழலை பாதிக்கும். எனவே, ஆண்டுக்கு ஒரு சில தினங்கள்  என்றில்லாமல், எப்பொழுதும் நாம் கடற்கரை பகுதிகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றாா். 

காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கடற்கரை சுத்தம் செய்யப்பட்டு, குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், மதுபாட்டில்கள் ஆகியவை அகற்றப்பட்டு, குப்பைகள் ஊராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், கடற்கரையில் 100 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. 

நிகழ்ச்சியில், ஓம்காா் பவுன்டேஷன் தலைவா் பாலாஜி, கடலோரக் காவல்படை உதவி ஆய்வாளா்கள்  சுப்பிரமணியன், ரவி, தன்னாா்வலா்கள், மீனவா்கள், கிராமத்தினா் கலந்து கொண்டனா். 

Image Caption

மனோரா கடற்கரையில் நடைபெற்ற தூய்மைப் பணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT