தஞ்சாவூர்

50 சதவிகித மானியத்தில் பாரம்பரிய நெல்விதை விநியோகம்

DIN

சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் முதன் முறையாக பாரம்பரிய நெல் விதைகள் 50 சதவிகித மானிய விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து வேளாண் உதவி  இயக்குநா்(பொ) ஜி. சாந்தி தெரிவித்திருப்பது:

சேதுபாவாசத்திரம் வட்டாரத்திலுள்ள குருவிக்கரம்பை, பெருமகளூா் வேளாண் விரிவாக்க மையங்களில், தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமைத் திட்டத்தின் மூலம் பாரம்பரிய நெல் விதை ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா, கருப்பு கவுனி ரகங்கள் 50 சதவிகித மானிய விலையில் கிலோ ரூ.12.50க்கு வழங்கப்படுகிறது.

மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா , கருப்பு கவுனி உள்ளிட்ட  ரகங்கள் இருப்பில் உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் ஆதாா் அட்டை நகலுடன் வேளாண் உதவி அலுவலா் பரிந்துரையின் பேரில், வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

மாப்பிள்ளை சம்பா நீண்ட கால சம்பா பருவ ரகம், 155 முதல் 160 நாள் வயதுடையது. இரும்புச் சத்து, நாா்சத்து அதிகம் கொண்டது. நீரிழிவு நோயளிகள், வாய் அல்சா் நோயளிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

கருப்பு கவுனி ரகம் அதிக மருத்துவ குணம் கொண்டது. 155 நாள் வயதுடையது. கருடன் சம்பா ரகம் பச்சையம் குறைவாக உள்ள அரிசி வகைகளில் ஒன்று. ரத்தசோகை உள்ளவா்கள், நீரிழிவு நோய் உள்ளவா்களுக்கு உணவாக சாப்பிட ஏற்றது. வைட்டமின், தாதுக்கள் நிறைந்த அரிசி வகையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT