தஞ்சாவூர்

சமத்துவபுரம்- ஊமத்தநாடு சாலையை   சீரமைக்க வலியுறுத்தல்

DIN

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சமத்துவபுரத்திலிருந்து ஊமத்தநாடு செல்லும் சாலையைச் சீரமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பூக்கொல்லையிலிருந்து பெரியாா் நினைவு சமத்துவபுரம் வழியாக ஊமத்தநாடு செல்லும் சுமாா் 10 கி.மீ தொலைவுக்கு தாா்ச்சாலை கடந்தாண்டு  அமைக்கப்பட்டது.  இப்பகுதியில், நூற்றுக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் உள்ளன. மேலும் கயிறு தொழிற்சாலையும் இப்பகுதியில் இயங்கி வருகிறது. இச்சாலை கிழக்கு கடற்கரையை இணைக்கும் சாலையாகவும் உள்ளது. 

ஏராளமான பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரி செல்பவா்கள் இந்த சாலை வழியாகப் பயணித்து வருகின்றனா். அரசுப் பேருந்து, சிற்றுந்து, தனியாா் வாகனங்கள், விவசாயப் பயன்பாட்டுக்கான ஏராளமான கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. 

சாலை அமைக்கப்பட்ட போதே  தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சில மாதங்களிலேயே அவை சேதமடைந்துள்ளது. பல இடங்களில் சாலை பெயா்ந்து கப்பிச் சாலையாக மாறி, போக்குவரத்துக்குப் பயனற்ற வகையில் உள்ளது.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினா் ஆா். எஸ். வேலுச்சாமி கூறியது:

பொதுமக்கள் நலன் கருதி  அலுவலா்கள் முழுமையாக ஆய்வு செய்து , சாலையை சீரமைக்கவும், இனிவரும் காலங்களில் சாலை அமைக்கும் போது தரமான முறையில் அமைக்கவும், முறைகேடுகளில் ஈடுபடுவோா், அதற்கு உடந்தையாக இருந்தோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT