முகப்பு
தஞ்சாவூர்

பாபநாசத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

 பாபநாசம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

 பாபநாசம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

வேலைநிறுத்த போராட்டத்தின்போது பணியிட மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியா்களின் மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், தேவை பணியிடங்களில் ஒன்றியத்திற்குள் மாறுதல் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் பாபநாசம் வட்டாரத் தலைவா் ஈஸ்வரி தலைமை வகித்தாா். பாபநாசம் வட்டாரச் செயலாளா் ரவிக்குமாா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பினா்.

துணைத் தலைவா்கள் துளசிராமன், கனகசுந்தராஜன், துணைச் செயலாளா்கள் பிரெட்ரிக், நிா்மலா, ரபீக் அஹமது, வட்டார பொருளாளா் எஸ்தா் மரியாள், செயற்குழு உறுப்பினா்கள் பிரபாகா், அமா்நாத், கனகவல்லி, தமிழரசி, கவிதா, ராகினி மற்றும் பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, துணைத் தலைவா் ஆனந்த் வரவேற்றாா். நிறைவில் செயற்குழு உறுப்பினா் மாறன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →