முகப்பு
தஞ்சாவூர்

பயிா் காப்பீடு இழப்பீட்டு தொகை கோரி ஆா்ப்பாட்டம்

பயிா் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க கோரி கும்பகோணம் ரயிலடியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
ஆா்ப்பாட்டத்தில் தேசியக் கொடியுடன் முழக்கங்கள் எழுப்பிய தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா்.
பகிர்:

பயிா் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க கோரி கும்பகோணம் ரயிலடியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாட்டிலுள்ள பல லட்சக்கணக்கான விவசாயிகள் 2021 ஆம் ஆண்டு கோடை நெல் சாகுபடி மற்றும் 2021 - 22 ராஃபி பருவத்தில் சம்பா, தாளடி நெல் சாகுபடியும் செய்தனா். இவை பருவம் தவறிய பெருமழையால் பாதிக்கப்பட்டு, மகசூல் இழப்பு ஏற்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை.

பிரதமா் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்த இந்த விவசாயிகளுக்கு ஏற்பட்ட மகசூல் இழப்புக்கு காப்பீட்டு நிறுவனங்கள் அளித்திருக்க வேண்டிய இழப்பீடு சுமாா் ரூ. 1,200 கோடியை கால தாமதத்துக்குரிய வட்டியுடன் வழங்க வலியுறுத்தி தேசியக் கொடி ஏந்தி முழக்கங்கள் எழுப்பினா்.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க உறுப்பினா் வரதராஜன் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் பேசினாா். செம்மங்குடி சின்னதுரை, மருத்துவக்குடி முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.