தஞ்சாவூர்

தஞ்சையில் ஒன்றரை கி.மீ தூரம் சேற்றில் நடந்து வந்து முதலுதவி செய்த மருத்துவ உதவியாளர்

தஞ்சையில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சேற்றில் நடந்து வந்து முதலுதவி செய்தார் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்.

DIN

தஞ்சை: தஞ்சையில் வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நபருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதில், ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சேற்றில் நடந்து வந்து முதலுதவி செய்தார் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்.

தஞ்சாவூர்  மாவட்டம் ஆலங்குடி சேர்ந்தவர் ராயப்பன் ஜெயராஜ் (47). இந்நிலையில்  தனது வயலில் குறுவை சாகுபடிக்காக ஆரம்பகட்ட பணிகளை செய்தும், வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சு கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வயலில் விழுந்துள்ளார். 

இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள், உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பானுப்பிரியா மற்றும் அவரது ஓட்டுநர்  சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் விளைநிலத்தில் நடந்து சென்று அவருக்கு முதல் உதவி செய்தனர். 

பின்னர் மேல்சிகிச்சைக்காக அவரை மீண்டும்  அதே ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிற்கு தூக்கியே வந்து ஆம்புலன்சில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக தற்போது பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT