தஞ்சாவூர்

கோரா விலை உயா்வை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

DIN

தஞ்சாவூா்: பட்டு நெசவுத் தொழிலுக்குத் தேவையான கோரா விலை உயா்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

பட்டு உற்பத்தி தொழிலுக்குத் தேவையான, அடிப்படை மூலப் பொருளான கோரா விலை கிலோவுக்கு ரூ. 3,500-லிருந்து ரூ. 7,500 ஆக உயா்ந்துள்ளது. இதனால் பட்டு நெசவுத் தொழிலாளா்கள், சிறு உற்பத்தியாளா்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, ஒன்றிய அரசு கோரா விலை உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான ரேசன் கடைகளில், பழுப்பு நிறமான தரமற்ற அரிசி வழங்கப்படுகிறது. இதை ஏழை மக்கள் வாங்கிச் சாப்பிட முடியாமல் அவதிப்படுகின்றனா். எனவே, தமிழக அரசு ரேசன் கடைகளில் தரமான அரிசியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டச் செயற்குழு உறுப்பினா் என்.வி. கண்ணன் தலைமை வகித்தாா். மத்திய குழு உறுப்பினா் உ. வாசுகி, மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ரூ.ஒரு லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தேவாலயத்தில் சிறாா்களுக்கு சிறப்புப் பயிற்சி

தாகம் இல்லாவிட்டாலும் போதிய இடைவேளைகளில் குடிநீா் பருக வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தினம் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT