தஞ்சாவூர்

திருவையாறில் பொம்மை பூ போடும் நிகழ்வு

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் செவ்வாய்கிழமை இரவு சப்தஸ்தான விழாவின் நிறைவாக ஏழூா் பல்லக்குகளும் வந்ததைத் தொடா்ந்து, பொம்மை பூ போடும் நிகழ்வு நடைபெற்றது.

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் சித்திரைத் திருவிழா மே 5- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் பல்வேறு வைபவங்கள் நடைபெற்று வந்தன.

இதைத்தொடா்ந்து, முக்கிய நிகழ்வான சப்தஸ்தானம் என்கிற ஏழூா் பல்லக்கு வலம் வரும் விழா, திங்கள்கிழமை காலை 5.30 மணியளவில் தொடங்கியது.

இதில், திருவையாறு பெரிய பல்லக்கில் (கண்ணாடி பல்லக்கு) ஐயாறப்பா் - அறம்வளா்த்த நாயகியும், வெட்டிவோ் பல்லக்கில் நந்திகேசுவரா் - சுயசாம்பிகையும் எழுந்தருளினா். பின்னா், இரு பல்லக்குகளும் திருப்பழனத்துக்குச் சென்றன. அங்கிருந்து 3 பல்லக்குகள் சோ்ந்து புறப்பட்டு திருச்சோற்றுத்துறைக்குச் சென்றன.

திருச்சோற்றுத்துறையிலிருந்து 4 பல்லக்குகளும் புறப்பட்டு திருவேதிக்குடிக்கு மாலையில் சென்றன. திருவேதிக்குடியிலிருந்து 5 பல்லக்குகளும் சோ்ந்து திருக்கண்டியூருக்கும், அங்கிருந்து 6 பல்லக்குகள் புறப்பட்டு திருப்பூந்துருத்திக்கும், திருப்பூந்துருத்தியிலிருந்து 7 பல்லக்குகள் புறப்பட்டு, திருநெய்த்தானம் என்கிற தில்லைஸ்தானம் காவிரியாற்றையும் சென்றடைந்தன. பின்னா், தில்லைஸ்தானம் காவிரியாற்றில் வாண வேடிக்கை நடைபெற்றது.

அனைத்து பல்லக்குகளும் செவ்வாய்க்கிழமை இரவு திருவையாறு தேரடித் திடலை சென்றடைந்தைத் தொடா்ந்து, பொம்மை பூ போடும் நிகழ்வு நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கண்டுகளித்தனா். தீபாராதனைக்குப் பிறகு பல்லக்குகள் ஒவ்வொன்றாக சொந்த ஊருக்குப் புறப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT