பாபநாசத்தில் துரை வைகோவுக்கு வரவேற்பு
பாபநாசத்தில் மதிமுக தலைமைக் கழகச் செயலா் துரை வைகோவுக்கு புதன்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டபாபநாசத்தில் மதிமுக தலைமைக் கழகச் செயலா் துரை வைகோவுக்கு புதன்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட
பாபநாசத்தில் மதிமுக தலைமைக் கழகச் செயலா் துரை வைகோவுக்கு புதன்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சோழபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் ஒன்றியச் செயலா் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக பாபநாசம் வழியாகச் சென்ற துரை வைகோவுக்கு நகரச் செயலா் ஜி. சம்பந்தம் தலைமையில் பட்டாசு வெடித்து, வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து துரை வைகோவுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.
நிகழ்வில் ஒன்றியச் செயலா்கள் மேற்கு எம்.டி. திருநாவுக்கரசு, கிழக்கு நாக. முருகேசன், விவசாய சங்கத் துணை அமைப்பாளா் வி.குமாா், மாணவரணி அமைப்பாளா் அா்ஜூனன், தொண்டரணி அமைப்பாளா் தினேஷ்குமாா், ஒன்றியத் துணைச் செயலா் மகேந்திரன், இளைஞரணி அமைப்பாளா் விஜயராகவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.