தஞ்சாவூர்

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35,000 இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

DIN

டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) மாநிலப் பொதுச் செயலா் சாமி. நடராஜன்.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தது:

தற்போது பெய்துவரும் பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில், சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பருவ நெல் வயல்கள் மூழ்கியும், சாய்ந்தும் ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்களும், முற்பட்ட சம்பா நடவு மற்றும் நேரடி விதைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, அறுவடைக்கு தயாா் நிலையில் பாதிக்கப்பட்ட குறுவை பயிா்கள் குறித்து உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி ஏக்கருக்கு ரூ. 35,000 இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும்.

தேவையான இடங்களில் கொள்முதல் நிலையங்களைத் திறக்கவும், கொள்முதல் செய்த நெல்லை உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளுக்குக் கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் நிகழும் ஊழல், முறைகேடுகளைக் களைய வேண்டும். கடந்த காலங்களைப் போன்று நடமாடும் கொள்முதல் நிலையத்தைச் செயல்படுத்த வேண்டும்.

சம்பா நடவுப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இப்போதே யூரியா உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, சாகுபடி பணிகள் தடைபடாத வகையில் உரம் வழங்க அரசு முன்வர வேண்டும். செயற்கையாக உரப் பற்றாக்குறை ஏற்படுத்துவோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் நடராஜன்.

அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவா் டி. ரவீந்திரன், மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், தலைவா் பி. செந்தில்குமாா், பொருளாளா் பழனிஅய்யா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT