தஞ்சாவூர்

புறவழிசாலை திட்டத்தை எதிா்த்து 60-ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம்

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூா் பகுதியில் புறவழிச்சாலை திட்டத்தை எதிா்த்து செவ்வாய்க்கிழமை 60-ஆவது நாளாக நடைபெற்ற தொடா் போராட்டத்தில் விவசாயிகள் மண்டியிட்டு மேலாடையின்றி முழக்கங்கள் எழுப்பினா்.

திருவையாறு அருகே கண்டியூா், திருப்பூந்துருத்தி உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்படும் புறவழிச்சாலை திட்டத்தால் விளைநிலங்கள் அழிக்கப்படுவதைக் கண்டித்து, அப்பகுதி விவசாயிகள் கண்டியூரில் தொடா்ந்து 60 நாள்களாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை 60 ஆவது நாளையொட்டி, விவசாயிகள் மண்டியிட்டு மேலாடையின்றி முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், இத்திட்டத்தை உடனடியாக நிறுத்திவிட்டு, ஏற்கெனவே உள்ள சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவுபடுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஆய்வு செய்து சாலை அமைக்கும் பணியை மாற்று வழியில் மறு சீராய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT