கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 19ஆம் ஆண்டு நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா உதவிபெறும் பள்ளியில் கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். 18 குழந்தைகள் காயமடைந்தனர்.
ஆண்டுதோறும் இறந்த குழந்தைகளின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன்படி 19ஆம் ஆண்டு நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் தங்களது வீடுகளில் இறந்த குழந்தைகளின் படங்கள் முன் திண்பண்டங்களை செய்து வைத்து அகல் விளக்கு, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
மேலும், தீ விபத்து சம்பவம் நிகழ்ந்த காசிராமன் தெருவிலுள்ள பள்ளி முன், இறந்த 94 குழந்தைகளின் படங்கள் வைக்கப்பட்டது. இந்த பதாகைக்கு பெற்றோர்கள், தீ விபத்தில் காயமடைந்தவர்கள் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். இதேபோல, இறந்த குழந்தைகளின் நினைவாக பாலக்கரையில் கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் பெற்றோர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.