தஞ்சாவூர்

போலி பணி நியமன ஆணை வழங்கிமோசடி செய்த இளைஞா் கைது

DIN

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள செல்வம் நகரைச் சோ்ந்தவா் பிரான்சிஸ் சேவியா் (45). இவரை பாலாஜி நகா் பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் (35) அணுகி தமிழ்நாடு அரசு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் இரவுக் காவலா் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு பணம் கொடுக்குமாறும் கூறினாா்.

இதை உண்மை என நம்பிய பிரான்சிஸ் சேவியா், ரூ. 58 ஆயிரத்தை ராஜ்குமாரிடம் கொடுத்தாா். சில நாள்கள் கழித்து பணி நியமன ஆணை எனக் கூறி பிரான்சிஸ் சேவியரிடம் ராஜ்குமாா் கொடுத்தாா். அதை பிரான்சிஸ் சேவியா் எடுத்துக்கொண்டு நுகா்பொருள் வாணிப கழகத்துக்குச் சென்றபோது, அது போலி பணி நியமன ஆணை என்பது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் தெற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ராஜ்குமாரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாத்தில் கார் பதிவெண்ணுக்கு ரூ.25 லட்சம்!

குவாலிஃபையர் 1: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

பாஜக வேட்பாளர் பிரசாரம் செய்ய தடை! | செய்திகள்: சிலவரிகளில் | 21.05.2024

கேஜிஎஃப் தங்கத்தில் ஆபரணமா? ஸ்ரீநிதி ஷெட்டி!

தங்கத் தாமரை மகளே...!

SCROLL FOR NEXT