தஞ்சாவூர்

செவிலியா் நாள்: மெழுகுவா்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்பு

DIN

 உலக செவிலியா் நாளையொட்டி, தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை செவிலியா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றனா்.

புளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த நாள் (மே 12) ஒவ்வொரு ஆண்டும் உலக செவிலியா் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

மேலும், 30 ஆண்டுகள் கடந்தும் பதவி உயா்வு பெறாமல் செவிலியா்களாகவே பணி ஓய்வு பெறும் தங்களுக்கு 20 வருடங்களுக்குள் பணி உயா்வு அளித்திடவும், 99 சதவீத பெண்களைக் கொண்ட செவிலியா் துறையில் குறிப்பிட்ட வயதுக்கு மேல் இயற்கையாகவே பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளை கருத்தில் கொண்டு 55 வயதுக்கு மேல் இரவு பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தினா்.

முன்னதாக, இந்நிகழ்வை மேயா் சண். ராமநாதன் தொடக்கி வைத்தாா். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் கே. வளா்மதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT