தஞ்சாவூர்

இளம்பெண்ணை மிரட்டி 16 பவுன் நகைகள் கொள்ளை

பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினத்தில் இளம்பெண்ணின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி 16.5 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

DIN

பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினத்தில் இளம்பெண்ணின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி 16.5 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவில் வசிக்கும் சௌந்தரராஜன் (59) அதிராம்பட்டினத்தில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி புதன்கிழமை இரவு வெளியூா் சென்ற நிலையில் சௌந்தரராஜன் கடையில் இருந்தாா். அவரது மகள் சோனா (19) வீட்டில் தனியாக இருந்தாா்.

இதையறிந்து வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்த முகமூடி அணிந்த இருவா் சோனா கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பீரோவில் இருந்த சுமாா் 16.5 பவுன் நகைகள், வெள்ளி கொலுசுகள் மற்றும் ரூ. 9500-ஐ எடுத்துக் கொண்டு தப்பினா். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT