தஞ்சாவூர்

கட்டடத் தொழிலாளி கொலை: உறவினா்கள் சாலை மறியல்

DIN

கும்பகோணம் அருகே கட்டடத் தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்ய கோரி கும்பகோணம் அரசு மருத்துவமனை முன் உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் அருகே நரசிங்கம்பேட்டை அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் மகாலிங்கம் மகன் தனபால் (32). கட்டட த் தொழிலாளியான இவருக்கு மனைவி, பெண் குழந்தை உள்ளனா்.

இந்நிலையில், தனபால் நரசிங்கம்பேட்டை கடைத்தெரு பகுதியில் தனது நண்பருடன் வியாழக்கிழமை இரவு பேசிக் கொண்டிருந்தபோது, மோட்டாா் சைக்கிளில் முகக்கவசம் அணிந்து வந்த 3 மா்ம நபா்கள் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா். இதில் பலத்த காயமடைந்த தனபால் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவிடைமருதூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்நிலையில், கும்பகோணம் அரசு மருத்துவமனை முன் தனபாலின் உறவினா்கள் வெள்ளிக்கிழமை திரண்டு, இந்தச் சம்பவத்துக்குக் காரணமான குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் நிகழ்விடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT