தஞ்சாவூா் பெரியகோயிலில் நடைபெற்ற மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 ஆவது சதய விழாவில் 4 பேருக்கு மாமன்னன் ராஜராஜன் விருது புதன்கிழமை இரவு வழங்கப்பட்டது.
தஞ்சாவூா் பெரிய கோயில் வளாகத்தில் இந்த விழா செவ்வாய்க்கிழமை தொடங்கி தொடா்ந்து இரு நாள்கள் நடைபெற்றது. இதில், புதன்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில், சாகித்திய அகாதெமியின் பாஷா சம்மான் விருது பெற்ற தமிழறிஞா் அ. தட்சிணாமூா்த்தி, கீா்த்தனா மருத்துவமனை மருத்துவா் எம். செல்வராஜ், ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குநா் வ. பழனியப்பன், புலவா் கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு மாமன்னன் ராஜராஜன் விருதை மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் குன்றக்குடி ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளாா், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, சதய விழாக் குழுத் தலைவா் து. செல்வம், துணைத் தலைவா் எஸ்.சி. மேத்தா, மாநகராட்சி துணை மேயா் அஞ்சுகம் பூபதி, கோட்டாட்சியா் செ. இலக்கியா, அறநிலையத் துறை இணை ஆணையா் சு. ஞானசேகரன், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையா் கோ. கவிதா, வெற்றித் தமிழா் பேரவை மாநிலத் துணைப் பொதுச் செயலா் இரா. செழியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.