சுவாமிமலையில் சித்திரைத் தேரோட்டம்
கும்பகோணம் அருகே சுவாமிமலை முருகன் கோயில் சித்திரைத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடான இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா 10 நாள்களுக்கு நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு விழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 17 ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. இந்நிலையில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
Advertisement