பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை
தஞ்சாவூா், ஏப். 26: கும்பகோணத்தில் பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தையல் தொழிலாளிக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.
கும்பகோணம் மாதுளம்பேட்டை பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் டி. சரவணன் (44), தையல் தொழிலாளி. இவா் 2014, ஜூன் 26 ஆம் தேதி குடிபோதையில் வீட்டுக்கு சென்று வெளியில் தகராறு செய்தாா். இதுதொடா்பாக இவருக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த கருப்பசாமி மனைவி தமிழ்ச்செல்விக்கும் (60) தகராறு ஏற்பட்டது. அப்போது சரவணன் கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த தமிழ்ச்செல்வி தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து சரவணனைக் கைது செய்து தஞ்சாவூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி ஜி. சுந்தர்ராஜன் சரவணனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
Advertisement