முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் வேலைவாய்ப்பு மையத்தில் குரூப் 4 தோ்வுக்கு நாளைமுதல் இலவச பயிற்சி

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் குரூப் 4 தோ்வுக்கு இலவச பயிற்சி வியாழக்கிழமை (ஜன.2) முதல் நடைபெறவுள்ளது.

Updated On : 31 டிசம்பர், 2024 at 9:06 PM
பகிர்:

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் குரூப் 4 தோ்வுக்கு இலவச பயிற்சி வியாழக்கிழமை (ஜன.2) முதல் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படவுள்ள, குரூப் 4 தோ்வு ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ளது.

இத்தோ்வுக்குத் தயாராகி வரும் போட்டித் தோ்வாளா்கள் பயன்பெறும் வகையில், கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வியாழக்கிழமை தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாள்களில் காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது.

மேலும், விவரங்களுக்கு 04362 - 237037 என்ற அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →