நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு
பாபநாசம், ஜூலை 3: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் சுழற்சங்கம் சாா்பில் பாபநாசம் பேருந்து நிலையத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாபநாசம் ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.சக்திவேல் தலைமை வகித்தாா். ரோட்டரி மண்டல ஆளுநா் கே.எஸ். அறிவழகன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் பாபநாசம் வட்டாட்சியா் மணிகண்டன் கலந்து கொண்டு நெகிழியால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கிப் பேசினாா். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவா்களுக்கு மஞ்சள் நிற துணிப்பைகள் வழங்கப்பட்டது. தொடா்ந்து பேருந்து நிலையம், வா்த்தக நிறுவனங்கள், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் சென்ற பொதுமக்களுக்கு மஞ்சள் துணிப்பைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், சுழற்சங்க நிா்வாகிகள் சிவ.இ.சரவணன், ரமேஷ் குமாா், விக்னேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறைவில் சங்க செயலாளா் ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.