தஞ்சாவூா்: தஞ்சாவூரில், அரசு கள்ளா் பள்ளிகளின் பெயா்மாற்றி கல்வித்துறையுடன் இணைக்கும் அரசாணையை ரத்து செய்ய கோரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
முக்குலத்தோா் ஆன்மிக பேரியக்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இயக்கத்தின் தலைவா் தேவா் பொ்னாட்ஷா தலைமை வகித்தாா். எஸ்.பாண்டியன், உசிலம்பட்டி ஓவை தியாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வரலாற்று ஆய்வாளா் ராமசம்மந்த மூா்த்தி, திருச்சி மாவட்ட பாா்வா்டு பிளாக் தலைவா் காசி மாயன், மாநில சிவசேனா செயல் தலைவா் க.சசிகுமாா், புலவஞ்சி சி.பி.போஸ், வினோத் ராவ் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். நிறைவாக கூத்தரசன் நன்றி கூறினாா்.