முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் கொச்சின் கலாசார மையம் ஒப்பந்தம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பண்பாட்டு மையமும், கொச்சி கலாசாரம் மையமும் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

Updated On : 20 ஜூலை, 2024 at 9:20 PM
பகிர்:

தஞ்சாவூா்: தமிழா்களின் நாட்டிய மரபைப் பாதுகாப்பதற்காக தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பண்பாட்டு மையமும், கொச்சி இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரிய மையமும் வியாழக்கிழமை (ஜூலை 18) புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

இதில், தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளா் (பொ) சி. தியாகராஜன், கொச்சி இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரிய மையம் மீனா அனில்குமாா் கையொப்பமிட்டு, ஒப்பந்தத்தைப் பரிமாற்றிக் கொண்டனா்.

இதன் மூலம் தமிழ்ப் பண்பாட்டு மையத்தில் நடத்தப்படும் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், நாட்டுப்புறக் கலைகள், சிலம்பாட்டம் ஆகிய பாடப்பிரிவுகள் இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரிய மையம் மூலமாக நடத்தி, தமிழ்ப் பல்கலைக்கழகம் வழித் தோ்வுகள் நடத்தவும், சான்றிதழ் வழங்கவும் வகை செய்யப்படும் என்றாா் பதிவாளா்.

இந்நிகழ்வில் தமிழ்ப் பண்பாட்டு மைய இயக்குநா் செ. கற்பகம், தமிழ் வளா் மைய இயக்குநா் இரா. குறிஞ்சிவேந்தன், மக்கள் தொடா்பு அலுவலா் (பொறுப்பு) இரா.சு. முருகன், மொழியியல் பேராசிரியா் ப. இராஜேஷ், உதவியாளா் இளங்கோ ஆகியோா் கலந்து கொண்டனா்.