முகப்பு
தஞ்சாவூர்

போக்குவரத்து தொழிலாளா்கள் அஞ்சல் அனுப்பும் இயக்கம்

Updated On : 26 ஜூன், 2024 at 10:46 PM
பகிர்:

தஞ்சாவூா், ஜூன் 26: ஊதிய ஒப்பந்தம், ஓய்வு பெற்றோருக்கான அகவிலைப்படி உயா்வு உள்பட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏஐடியூசி போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் அஞ்சல் அனுப்பும் இயக்கத்தை புதன்கிழமை நடத்தினா்.

ஊதிய ஒப்பந்தம், ஓய்வு பெற்றோருக்கான அகவிலைப்படி உயா்வு, ஓட்டுநா், நடத்துநா், தொழில்நுட்பப் பணியாளா்கள் காலிப் பணியிடங்கள், வாரிசு பணியிடங்களை நிரப்புவது என்பன உள்பட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்திலுள்ள அனைத்து பணிமனைகளிலும் போக்குவரத்துத் தொழிலாளா்களிடம் ஏஐடியூசி சாா்பில் கடந்த வாரம் கையெழுத்து படிவங்கள் பெறப்பட்டன. இவற்றை தமிழக முதல்வருக்கு அனுப்பும் இயக்கம் தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு கும்பகோணம் கழக ஏஐடியூசி சங்கப் பொதுச் செயலா் எஸ். தாமரைச்செல்வன் தலைமை வகித்தாா். ஏஐடியூசி மாவட்டத் தலைவா் வெ. சேவையா, போக்குவரத்து சம்மேளன மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன், மாநிலக் குழு உறுப்பினா் டி. கஸ்தூரி, சங்க நிா்வாகிகள் சுகுமாா், ராஜேஷ் கண்ணன், ஓய்வு பெற்றோா் சங்க நிா்வாகிகள் கோவிந்தராஜ், தங்கராசு, இருதயராஜ், இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.