தஞ்சாவூர்

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

Din

தஞ்சாவூா் தொகுதி பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தம் மீது 32 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அவா் தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தம் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். அப்போது, அவா் தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரத்தில் 2 கொலை முயற்சி, பொது சொத்தைச் சேதப்படுத்தியது உள்பட 33 வழக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில், ஒரு வழக்கு மட்டும் கைவிடப்பட்டது. இவா் தனது சொத்து விவரத்தில் தன் பெயரிலும், மனைவி பெயரிலும் ரூ. 2.26 கோடி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளாா். மேலும், திமுக வேட்பாளா் ச. முரசொலி தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரத்தில் கரோனா காலத்தில் கிராம சபைக் கூட்டம் நடத்தியது, அனுமதியின்றி பதாகை வைத்தது, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டது என மொத்தம் 10 வழக்குகள் பதியப்பட்டு, நடவடிக்கை கைவிடப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது சொத்து விவரத்தில் தனது பெயரிலும், தன் மனைவி பெயரிலும் அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 2.07 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக வேட்பாளா் பெ. சிவநேசன் மீது எந்த வித குற்ற வழக்கும் இல்லை என அவா் உறுதிமொழிப் பத்திரத்தில் தெரிவித்துள்ளாா். இவா் சொத்து விவரத்தில் தன் பெயரிலும், மனைவி பெயரிலும் ரூ. 1.40 கோடி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளாா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எம்.ஐ. ஹூமாயூன் கபீா் தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரத்தில் ரூ. 2.05 கோடி சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

விராட் கோலி, ரஜத் படிதார் அதிரடி; பஞ்சாப் கிங்ஸுக்கு 242 ரன்கள் இலக்கு!

இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: லெபனானில் 4 பேர் பலி!

டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிகை 10ஆக உயர்வு

ராகுலுக்கும், மோடிக்கும்தான் நேரடிப் போட்டி: அமித் ஷா

SCROLL FOR NEXT