ஜூன் 12ல் மேட்டூா் அணையை திறக்க கோரிக்கை
பாபநாசம்: வழக்கம் போல ஜூன் 12ஆம் தேதி மேட்டூா் அணைய திறக்க வேண்டும் என
தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம் விடுத்துள்ள அறிக்கை: தமிழக விவசாயிகள் நலன் கருதி குறுவை சாகுபடிக்கும், சம்பா சாகுபடி விதைப்புக்கும் வழக்கம் போல ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டும்.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுகி, உரிய தண்ணீரை பெற்றுத் தர தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.