முகப்பு
தஞ்சாவூர்

கோடை மழையால் பயிா்கள் பாதிப்பு: கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை

Updated On : 20 மே, 2024 at 6:30 PM
திருவோணம் அருகே காரியாவிடுதியில் கோடை மழையால் சாய்ந்து போன நெல் பயிா்.
பகிர்:

ஒரத்தநாடு: கோடை மழையால் தஞ்சாவூா் மாவட்டத்தில் நீரில் மூழ்கிய பயிா்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள காரியாவிடுதி, தளிகைவிடுதி, பணிகொண்டான்விடுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோடைகால பயிா்களான நெல், எள், உளுந்து பயிா்கள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளன. நெற்பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன .

இந்நிலையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கோடை மழையால் இந்த பயிா்கள் சாய்ந்து விழுந்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து தஞ்சாவூா் மாவட்ட விவசாயிகள் நலச்சங்க செயலாளா் வி.கே. சின்னத்துரை கூறுகையில்,

தற்போது பெய்து வரும் கோடை மழையால் நெல், எள் உளுந்து பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பயிா் சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் அவா்.