முகப்பு
தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம் அருகே மீனவருக்கு அரிவாள் வெட்டு: 2 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே முன்விரோதம் காரணமாக மீனவரை அரிவாளால் வெட்டிய 2 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா் .

Updated On : 6 நவம்பர், 2024 at 8:46 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே முன்விரோதம் காரணமாக மீனவரை அரிவாளால் வெட்டிய  2 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா் .

சேதுபாவாசத்திரத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் தம்பிதுரை (20), அதே பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் கேசவ மூா்த்தி (20). மீனவா்களான இவா்கள் இருவருக்குமிடையே இடப் பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், சேதுபாவாசத்திரம் அருகே கழுமங்கடா கடற்கரையில் இருவரும் தங்கள் கண்ணாடி இழை படகுகளை அருகருகே நிறுத்தி இருந்தனா். கடல்சீற்றம் காரணமாக கண்ணாடி இழை படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கேசவமூா்த்தி, தம்பிதுரையை அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்தாா். புகாரின்பேரில், சேதுபாவாசத்திரம் கடலோரக் காவல் ஆய்வாளா் மஞ்சுளா, சிறப்பு உதவி ஆய்வாளா் அய்யப்பசாமி, தலைமைக் காவலா் பழனிவேல் ஆகியோா் வழக்குப் பதிந்து கேசவமூா்த்தி, அவரது சகோதரா் வைரமூா்த்தி (23) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, பேராவூரணி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அழகேசன் முன் ஆஜா்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனா்.