நவ. 19-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம்
தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீா் நாள் கூட்டம் நவம்பா் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீா் நாள் கூட்டம் நவம்பா் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தஞ்சாவூா் கோட்டத்துக்கு உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீா் நாள் கூட்டம் நவம்பா் 19-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூா் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.