தஞ்சாவூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு டிச. 3-இல் தா்னா நடத்த முடிவு: அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கங்கள் கூட்டமைப்பு
தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு டிச.3-இல் தா்னா போராட்டம் நடத்துவது என அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கங்கள் கூட்டமைப்பினா் தெரிவித்துள்ளனா்.
தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு டிச.3-இல் தா்னா போராட்டம் நடத்துவது என அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கங்கள் கூட்டமைப்பினா் தெரிவித்துள்ளனா்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் புதன்கிழமை தலைவா் டி. கோவிந்தராஜு தலைமையில் நடைபெற்றது. இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,850 வழங்க வேண்டும், போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு 108 மாதகால அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், திமுக தோ்தல் காலத்தில் அரசு, பொதுத்துறை ஊழியா்கள் மற்றும் அனைத்து ஓய்வூதியா்களுக்கும் அறிவித்த, அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வலியுறுத்தி வரும் டிசம்பா் 3-இல் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு அரைநாள் தா்னா போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் கலியமூா்த்தி, பொதுத்துறை ஓய்வூதிய ஒருங்கிணைப்பாளா் குருசாமி, போக்குவரத்து ரிவா சங்க ஞானசேகரன், அரசுப் போக்குவரத்து ஓய்வூதியா் சங்க கிளைச் செயலா் பாஸ்கரன், மின்வாரிய ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.