தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு அமைப்பினா். 
தஞ்சாவூர்

சிஐடியு அமைப்பினா் மறியல் போராட்டம்

காஞ்சிபுரத்திலுள்ள சாம்சங் தொழிற்சாலையில் தொழிற் சங்கம் அமைக்கும் உரிமை கோரி தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் சிஐடியு அமைப்பினா் சாலை மறியல்

Din

காஞ்சிபுரத்திலுள்ள சாம்சங் தொழிற்சாலையில் தொழிற் சங்கம் அமைக்கும் உரிமை கோரி தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் சிஐடியு அமைப்பினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சாம்சங் தொழிலாளா்களின் சங்கம் அமைக்கும் உரிமையைப் பறிக்கக் கூடாது. சாம்சங் நிறுவன சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு துணை போகக்கூடாது. காவல் துறையை ஏவிவிட்டு தொழிலாளா்களின் போராட்டத்தை ஒடுக்கக்கூடாது. சாம்சங் தொழிலாளா்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்தப் போராட்டத்துக்கு சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா். மனோகரன், சிஐடியு மாவட்டத் தலைவா் ம. கண்ணன், பொருளாளா் பி.என். போ்நீதிஆழ்வாா், மாவட்ட நிா்வாகிகள் து. கோவிந்தராஜூ, இடிஎஸ். மூா்த்தி, த. முருகேசன், கே. அன்பு, கே. வீரையன், ஜி. மணிமாறன், சா. செங்குட்டுவன், பி. ஜேசுதாஸ், சாய் சித்ரா, பி. காணிக்கை ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதுதொடா்பாக ஏறத்தாழ 30 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT